Home Top Ad

Responsive Ads Here

விஜய்-சர்கார் நீ ஒரு ராஜாங்கம்

Share:
            Image result for vijay sarkar                 



                             விஜய் போன்றவர்களால் மட்டுமே
இது போன்று நட்சத்திர அந்தஸ்தை பெற முடியும் என்றில்லை....

நீயும் ஒரு மாமனிதன் தான் !
உண்னை உற்று நோக்கினால்....

உண் கவனத்தை உன்னுள் திருப்பு
உலகம் உன்னை நோக்கி திரும்பும்.

உடல்   மனம்   உயிர்
இம்மூன்றையும்  செம்மைப்படுத்தினால் மனிதன் மாமனிதனாவான்.

நீ வாழும் வாழ்க்கை  உன் ராஜாங்கம் 


உடல் செம்மையாக
                                 முறையற்ற உணவுமுறை, உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், அதிக மன உளைச்சல், எதிலும் அவசரம், முறையான உறக்கம் இன்மை இவைகள் எல்லாம் பல்வேறு வியாதிகளுக்கு வித்திடுகின்றன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்புக்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் இதயம், சிறுநீரகம், மூளைகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு நவீன சிகிச்சை முறைகளும், பல்வேறு பரி சோதனைகளும் செய்யும் போது தாங்கள் சேமித்து வைத்த பணத்தை விரயப்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. பலர் பணத்தைமட்டும் அல்ல உறவுகளையும் இழந்து முதியோர் இல்லங்களையும், அனாதை இல்லங்களையும் நாட வேண்டியிருக்கிறது
                         இயற்கையுடன் இயைந்த வாழ்வை விட்டொழித்ததன் பலனாக ஏராளமான நோய்களை பெற்றுக்கொண்டு இருக்கிறோம். உணவே மருந்து என்ற நிலை போய், மருந்தை உணவு போல் சாப்பிடவும் அதுவே காரணம். சிறு நோய்களின் நீட்சியே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால் இயற்கை உணவுகள், மூலிகைகள் எந்த அளவிற்கு நம் உடல் நலத்தை காக்கின்றன என்று சில குறிப்புகள் உங்களுக்காக…


                                                     வாதம்  பித்தம் கபம்


இம்மூன்றும் சமன் செய்தால்............ நீ ஒரு ராஜாங்கம்

சுக்கு : தினமும் சுக்கு காபி பருகினால் உடல் பித்தம் முற்றிலும் சரியாகும். மேலும் அஜீரணம், மூக்கடைப்பை குணப்படுத்தும் வல்லமை கொண்டது சுக்கு.

மிளகு : சளி, பசியின்மை, உடல் அரிப்பு, தடிப்பு, ஆஸ்துமா, சைனஸ் இவற்றிற்கெல்லாம் மிளகு மிகச்சிறந்த நிவாரணியாகும்


திப்பிலி : வெற்றிலை, தூதுவளை சாறில் திப்பிலியை ஊரவைத்து சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும் வாயு தொல்லை அகலும் . 

தொடரும் நீ ஒரு ராஜாங்கம் ..................

1 comment:

  1. Coin Casino Online Canada 🎖️ R25 Free Bonus
    If you're looking for a trusted online casino 제왕카지노 Canada that's legal and secure, try our comprehensive review 인카지노 of this Canadian online deccasino casino. Rating: 4.2 · ‎Review by CasinoWow

    ReplyDelete