ஒரு மனிதனுக்கு உணவு, காற்று, நீர் இவையெல்லாம் எப்படி மிக அத்தியாவசியமோ, அப்படி தான் தூக்கமும். ஓர் நாள் இரவு சரியான தூக்கம் இல்லையென்றாலும் நம் மூளை சோர்ந்துவிடும். அதன்விளைவாக அன்றைய தினம் முழுவதும் நாம் உடல் நலம் குன்றியது போல் உணர்வோம். எந்த வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடுவோம்.
வேலை பளு அல்லது பிற காரணங்களுக்காக தூக்கம் கெட்டால் அதனை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், அதுவே இரவு நேரத்தில் எப்போதுமே தூக்கம் வராமல் நாம் அவதிக்குள்ளானால் அது கவனிக்க வேண்டிய விஷயம். தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்பட்டால் நீங்கள் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.
No comments