Home Top Ad

Responsive Ads Here

நகைச்சுவை நம்மை நலமாக்கும்

Share:


                                                        
                                இந்த சமுதாயத்தில் அனைவருமே ஏதாவது ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் தான், இருக்கிறார்கள். படிப்பு, வேலை, குடும்பம், பணம், பதவி, புகழ், சொர்க்கம், ஆன்மிகம் என அவர்களுடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கின்றனர்.

   பெரும்பாலோர் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக உழைக்கும் கட்டாயத்திற்கு, தன் குடும்ப சூழ்நிலையின் காரணமாக தள்ளப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் மிகுந்த மன அழுத்தங்களுக்கும், மன உளைச்சளுக்கும் ஆளாகின்றனர்.

   இது குறிப்பிட்ட ஒரு தொழில் துறையில் மட்டும் அன்றி அனைத்து துறைகளிலும் வேலை செய்யும் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் பொருந்தும். இதில் பெரும்பாலோர் அமைதி இழந்து விரக்தியுடனே இருக்கின்றனர். தன்னையும், தன் விதியையும் நொந்து கொண்டு வெறும் எந்திரங்களாகவே தங்கள் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு உள்ளனர்.

   நீங்கள் சற்று நகைச்சுவை உணர்வை மட்டும் உங்களிடம் வளர்த்துக் கொள்ளுங்கள். இதுவே உங்களை தலைகீழாக மாற்றி உங்கள் அனைத்து பிரச்சனைகளிலும் இருந்து விடுவித்து விடும். ஒவ்வொருவருக்கு இயல்பாகவே நகைச்சுவைத் தன்மை இருக்கும். மற்றவர்கள் அதை எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.

   நீங்கள் எந்த வேளையில் இருந்தாலும் சரி, நீங்கள் நகைச்சுவை உணர்வு கொள்ளும் பொழுது மற்றவருடன் நீங்கள் பழகும் விதம் அவருடன் இனக்கத்தை உருவாக்கும். அதனால் மற்றவருடன் உள்ள ஏற்றத்தாழ்வு மறைய ஆரம்பிக்கும். அதனால் ஆனவமின்றி செயல்பட ஆரம்பிக்கிறீர்கள். ஆனவத்துடன் செயல்படும் பொழுது மட்டுமே உங்கள் உடல் இருக்கமாகவும், வேகமாக சோர்ந்து விடும் நிலையிலும் இருக்கும்.

   அப்பொழுது மட்டுமே எதிர்செயல்கள் உங்கள் மனதை இருக்கமடையவும், மனப்பதிவுகளை உண்டாக்க கூடியதாகவும் இருக்கும். அதனாலேயே நீங்கள் விரக்தி அடைந்தவராக மாறுகிறீர்கள். நகைச்சுவை உணர்வாளராக ஆனவமின்றி செயல்படும் பொழுது உங்கள் உடல் தளர்வு நிலையிலேயே இருக்கிறது. அதனால் அது விரைவில் சோர்வடைவதில்லை. உங்களை நோக்கி வரும் செயல்களை இயல்பாகவே ஏற்றுக்கொள்ளும் தன்மைக்கு வருகிறீர்கள்.

   அதனால் மனதில் எந்த இறுக்கமும் இன்றி அது ஆரோக்யமாக செயல்படுகிறது. மனம் ஆரோக்யமாக இருப்பதால் உடல் ஆரோக்யமானதாக மாறுகிறது. இரண்டுமே உற்சாகத்துடன் இருப்பதால் நீங்கள் ஆனந்தமாக அனைத்திலும் செயல்பட ஆரம்பிக்கிறீர்கள். உங்கள் வாழ்வு சிறக்கிறது. நீங்கள் உங்கள் இயல்பிற்கு திரும்பி விடுகிறீரகள்.

   ஒரு சாதாரணமான என்று கருதும் நகைச்சுவை உணர்விற்கு இவ்வளவு ஆற்றல் உண்டு. உங்கள் அருகில் ஒரு நகைச்சுவையாளர் இருந்தால் நீங்கள் எந்த கவலையும் இன்றி உற்சாகமானவராக உங்களை உணர முடிந்ததை என்றாவது அனுபவித்திருக்கிறீர்களா. நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வே கொண்டாட்டமானதாக மாறிவிடும்.

No comments