நம்புங்கள்:
நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புங்கள்.
சந்தேகப் படாதீர்கள். நீங்கள் எதை அதிகமான் நினைக்கிறீர்களோ அதுவே வந்தடையும் என்பதுதான் இதன் இரண்டாவது விதி. பல நேரங்களில் "நான் கிளம்பும்போதே நினைத்தேன், இந்த வேலை சரியாக நடக்காது என்று" , "வண்டி நடுவழியில் தகராறு செய்யும் என்று முதலிலேயே தோன்றியது" என்றெல்லாம் நாம் கூறுவது உண்டு, அதற்குக் காரணம், நடக்கப் போவதை முன்கூட்டியே அறியும் சக்தி நமக்கு இருக்கிறது என்பதா?
கண்டிப்பாக இல்லை, நமது எதிர்மறை எண்ணமானது, அத்தகைய விளைவை உருவாக்கிவிட்டது என்றுதான் அர்த்தம். வெற்றியடைவோம் என்று உறுதியாக நம்புபவர்கள் வெற்றி அடைவதர்கும், தோல்வியடைந்துவிடுவோமோ என்று அச்சப்படுகிறவர்கள் தோல்வி அடைவதற்கும், அவர்களால் ஈர்க்கப்படும் அலைகளே காரணமாகின்றன. அடையுங்கள் : பெரும்பாலான சமயங்களில், நாம் விரும்புவது நம்மை வந்தடைகின்ற பொழுது, அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதுண்டு. நீங்கள் ஒரு வேலையில் இருக்கிறீர்கள், அதன் வேலை நேரம், சம்பளம் இவை எல்லாம் உங்களுக்கு ஒத்துவரவில்லை. உங்களுக்கு அதைவிட ஒரு நல்ல வேலை கிடைக்கும் பொழுது, 'புதிய வேலை எப்படி இருக்குமோ! இது பழக்கப்பட்ட இடம், நண்பர்கள் இருக்கிறார்கள். புதிய இடம் நமக்கு ஒத்து வராவிட்டால் என்ன செய்வது?' என்பது போன்ற தயக்கங்கள் உண்டாவதால் நாம் பல வாய்ப்புக்களை இழக்கிறோம். சொந்தத் தொழில் தொடங்க விரும்பும் பலர், தம்மிடம் அதற்கான தகுதியும் திறமையும் இருந்தும், இலாபம் கிடைக்காவிடில் என்ன செய்வது, நட்டமாகிவிட்டால் என்ன செய்வது என்று வாய்ப்புக் கிடைத்தாலும் அதை நழுவ விடுவதுண்டு. அவ்வாறின்றி, நாம் விரும்புவதை, இந்த உலகம் நம்மிடம் அளிக்கும்பொழுது, அதை இரு கரம் நீட்டிப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.
No comments